தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் காவல்துறையினர் 52 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு அந்த அமைப்புக்கு அனுமதி கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். இதற்கு முன்பு 4-ம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்டு இருந்த நிலையில் காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும் தற்போது உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.