
கடலூர் மாவட்டத்தில் கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக முருகேசன் கண்ணகி ஆவண கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிய நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி ஆயுள் தண்டனை பெற்ற கந்தவேல், ஜோதி மற்றும் மணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அவர்களின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் அவர்களின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்வதாக தீர்ப்பு வழங்கியுள்ளது.