விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காதலித்து திருமணம் செய்த மெக்கானிக்கை மனைவியின் சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு நந்தினி என்பவரை காதலித்து திருமணம் செய்த கார்த்திக் பாண்டி என்பவரை நந்தினியின் சகோதரர்கள் வெட்டி கொலை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்த பாலமுருகன், தனபாலன் மற்றும் சிவா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய நிலையில் தலைமறைவாக இருந்த இவர்களை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தற்போது சம்பவ இடத்திலும் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.