கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் பகுதியில் சிவராமன் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பட்டறை செயலாளராக இருந்த நிலையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி சீமான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் பள்ளியின் முதல்வர், தாளாளர், பயிற்சியாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

அவர் என்சிசி பயிற்சி அளிப்பதாக கூறி தனியார் பள்ளியில் முதல்வரிடம் அனுமதி வாங்கி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அவரை நேற்று நள்ளிரவு காவல் துறையினர் பிடித்தனர். அவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது காலில் அடிபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் என்சிசி பயிற்சிக்காக மத்திய அரசிடம் அவர் எந்த அனுமதியும் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது சிவராமனுக்கும் என்சிசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி சென்னையில் உள்ள என்சிசி தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரியில் எந்த ஒரு என்சிசி முகாம் நடைபெறுவதற்கும் தாங்கள் அனுமதி கொடுக்கவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.