
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே ஒரு கற்பழிப்பு வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவரிடம் தொடர்ந்து விசாரணை என்பது நடைபெற்று வரும் நிலையில் தற்போது திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து காரில் சென்று திருடியதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் இதைத் தொடர்ந்து ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது.