
தென் கிழக்கு வங்கக்கடல் அந்தமான் பகுதிகளில் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 7ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது புயல் சின்னமாக வலுவடைந்து தமிழக கரையை நெருங்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஏற்கனவே நவம்பர் 8-ம் தேதி மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் நவம்பர் இரண்டாம் வாரம் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது புதிய புயல் உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.