சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி அரூர் நெடுஞ்சாலையில் ‌2 மோட்டார் சைக்கிளில் காத்திருந்தவர்கள் மீது தனியார் பேருந்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது முன்னாள் சென்று கொண்டிருந்த ஒரு லாரி மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் பேருந்து வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த கர்ப்பிணி பெண், ஒரு குழந்தை, ஆண், பெண் உட்பட 4 பேர்  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து அரூர்-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள சுக்கம்பட்டி என்ற பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் தனியார் பேருந்தில் இருந்த 10 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.