கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக இன்றும் ஓலா, ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் சேவை கட்டணம் அதிரடி உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக Rs120 வரை உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சேவைக்கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.