தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 2,500 கல்குவாரிகள், 3,000 கிரஷர்கள் உள்ளன. கடுமையான விதிமுறைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கின்றனர். இதனால் வீட்டு கட்டுமான பொருட்கள், ஜல்லி, M-Sand, கிரானைட் கற்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.