தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெறும் நிலையில் கூடுதல் மகளிர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி கலைஞரின் பிறந்த நாள் தினத்தில் ஜூன் மாதம் புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூன் மாதம் 4-ம் தேதி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தற்போது அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஜூன் மாதம் நான்காம் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பதற்காக 9000 சிறப்பு முகாம்கள் நடைபெறும். மேலும் இந்த அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.