
தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் பொன்முடி ஆகியோர் தங்களுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
சமீபத்தில் பொன்முடி பெண்கள் பற்றி பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதன் பிறகு செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி அல்லது ஜாமின் இரண்டில் ஒன்றுதான் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்ததால் தற்போது அவரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.