நாடு முழுவதும் முழுவதும் பாஜகவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவிலும் புதிய தலைவர் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலையை தேசிய மேலிடம் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை புதிய மாநில தலைவராக நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.