இஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்பிய குற்றத்துக்காக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். தொடர்ந்து டுவிட்டரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டதற்காக 2021 ஆம் ஆண்டு கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சிறைக்கு செல்கிறார்.