சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது போலீஸ்  விசாரணையில் தெரிய வந்த நிலையில் அவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட‌ முயன்றதால் கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இன்று அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடு முயன்ற பாஜகவினரையும் கைது செய்துள்ளனர். அதோடு பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை கிண்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது அவரையும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரையும் காவல்துறையினர் கட்டாயப்படுத்தி கைது செய்துள்ளனர். இருவரும் நாங்கள் வரமாட்டோம் என்று கூற‌அவர்களை கட்டாயப்படுத்தி காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர். மேலும் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.