தமிழக பாஜக சார்பில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பாஜகவினர் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது வீட்டு காவலில் அவர்களை கைது செய்து வருகிறார்கள். அதாவது போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் வினோஜ் பி செல்வம், தமிழிசை சௌந்தர்ராஜன் உட்பட பாஜக மூத்த தலைவர்கள் பலரை வீட்டுக்காவலில் கைது செய்துள்ளனர்.

அதன்பிறகு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் நோக்கி வரும் பாஜகவினரை தொடர்ந்து போலீசார் கைது செய்து வருகிறார்கள்.மேலும் பாஜகவினர் ஒன்றாக திரண்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  வீட்டுக்காவலில் வைத்தே  போலீசார் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட நினைப்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.