திமுக கட்சியின் 75 ஆம் ஆண்டு பவள விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதன்படி , தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து கா. ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் அரசு தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக கோவி. செழியன், ஆர். ராஜேந்திரன், சா.மு. நாசர் மற்றும் செந்தில் பாலாஜி அவர்களுக்கும்  இடம் கிடைத்துள்ளது. புதிய அமைச்சர்கள் நாளை மாலை 3:30 மணிக்கு , ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளனர்.