நாடாளுமன்றத்தில் நேற்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்கள், வெள்ள நிவாரண நிதி போன்றவைகள் ஒதுக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ரயில்வே திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆந்திரா மற்றும் பீகாரருக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு என்ற பெயரை இடம்பெறவில்லை. மேலும் பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.