
இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு சமீபத்தில் 200 குறைத்ததாக அறிவித்த நிலையில் தற்போது 918 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசும் சிலிண்டர் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்க அதாவது ஒரு சிலிண்டர் விலை 800 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.