
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மாணவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவருக்கும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் உதவி தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில் தமிழ் புதல்வன் திட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது.
இந்த நிலையில் தமிழ் புதல்வன் திட்டத்திற்காக 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் தோராயமாக 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.