
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடிகர் விஜய் தலைமையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு
நடைபெறுகிறது.
இந்த மாநாடு குரும்பபாளையம் பகுதியில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. மேலும் இந்த அறிவிப்பை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
நமது கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் (26.04.2025 & 27.04.2025) தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில், குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நம் வெற்றித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. https://t.co/hAGGERtj7H
— TVK IT Wing (@Actor_Vijay) April 21, 2025