
தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்த நிலையில் அவர்கள் 21 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு எழுத்துப்பூர்வமாக தமிழக வெற்றி கழகம் பதில் வழங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு இன்று அனுமதி விழுப்புரம் எஸ்பி அனுமதி கொடுத்துள்ளார். அதாவது சில நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்த நடிகர் விஜய் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் தமிழக வெற்றி கழகத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சட்டபூர்வமான பதிவுக்காக தான் இதுவரை காத்திருந்ததாகவும் தற்போது அது நடந்து விட்டதாகவும் விஜய் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அதோடு தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஆயுதப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பொறுமையாக காத்திருக்க வேண்டும் எனவும் தன் அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) September 8, 2024