
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் சமீபத்தில் கட்சி கொடி மற்றும் கட்சியின் பாடல் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு நடிகர் விஜய் கட்சி தொடங்கி 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அவருடைய கட்சிக்கு முழு அங்கீகாரம் கொடுத்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வருகின்ற 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கேட்டிருந்த நிலையில் 21 கேள்விகள் கேட்கப்பட்டு புஸ்ஸி ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த அனைத்து கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக தமிழக வெற்றி கழகம் பதில் வழங்கிய நிலையில் தற்போது காவல்துறையினர் மாநாடு நடத்த அனுமதி வழங்கி உள்ளனர். மேலும் தற்போது காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதால் இன்று காலை 11 மணியளவில் மாநாடு நடக்கும் தேதியை நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார். இந்த மாநாட்டில் 50,500 பேர் கலந்துகொள்கிறார்கள்.