
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹரியானா தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் யார் வெற்றி வாகை சூடுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது நிலவரப்படி ஹரியானா தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 4130 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.