சென்னை மாநகராட்சியின் திமுக கவுன்சிலர் ஏ. ஸ்டாலின்,  திமுக கட்சியில் இருந்து  நீக்கப்பட்டுள்ளார். அவரை அனைத்து பொறுப்புகளிலிருந்து, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை, அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏ. ஸ்டாலின் மீது, குடிநீர் மற்றும் கழிவுநீர் பணி செய்யும் ஒப்பந்ததாரரிடம் 10 லட்சம் லஞ்சம் கேட்டு, மிரட்டல் விடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்த புகாரின் பின்னணியில், கட்சி அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் இவர் மிரட்டி பணம் பறித்ததாக சொல்லப்படும் புகாரியில் காவல்துறையினர் வலது பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.