திமுக கட்சியின் மூத்த நிர்வாகியும் கடலூர் கிழக்கு மாவட்ட அவை தலைவருமான தங்கராசு உடல்நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது திமுக கட்சிக்காக பணியாற்றிய தங்கராசுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கராசுவை கடந்த 1-ம் தேதி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் சென்று நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது மறைவுக்கு தற்போது திமுக கட்சியின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.