
திமுக முன்னாள் எம்.பி. வி.பி. சண்முகசுந்தரம்(75) உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.
இவர் உடல் நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். வி பி சண்முகசுந்தரம் கோபிசெட்டிபாளையம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 1996 – 1998 ஆண்டு வரை பணியாற்றியவர்.
மேலும் திமுகவின் பல முக்கிய பொறுப்புகளை வகித்துவந்தார். இவரது மறைவு செய்தி கேட்டு திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது தொண்டர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றன.