விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது, திமுகவை மட்டுமே நம்பி வீசிக்க அரசியல் செய்வதாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் எடுக்க முடியும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாம் கருத்து சொல்வதால் அவதூறு பரப்புகின்றனர்.

திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கிற ஒரே துருப்பும் சீட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே நம்பி விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை என கூறியுள்ளார்.