
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிகந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை சிகந்தர் மலை என அழைக்க தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையில் நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு கருத்து தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது, கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள் தான் சரியாக இல்லை. திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது. தொல்லியல் துறைக்கு சொந்தம் என்ற வாதத்தை ஏற்க முடியாது என கூறியுள்ளனர்.