தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தவர் எஸ்.எஸ் ஸ்டான்லி. இவர் உடல்நல குறைவின் காரணமாக சென்னையில் காலமானார். இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன், ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் பெரியார் திரைப்படத்தில் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். இவர் தற்போது திடீரென காலமான நிலையில் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் சமீப காலமாக திரையுலகில் அடுத்தடுத்த பிரபலங்கள் மரணமடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.