
தமிழ் சீரியல்களில் பிரபல நடிகராக இருந்தவர் பிரபாகரன். இவர் கெட்டி மேளம், மீனாட்சி பொண்ணுங்க, மலர் விழும் பனித்துளி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் பிரபலமாக நடித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக தொடர் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.
ஆனால் இன்று சிகிச்சை பலனின்று இறந்துவிட்டார். இவர் கிட்டதட்ட 20 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் தற்போது உயிரிழந்து விட்டார். மேலும் சமீபகாலமாக பல்வேறு பிரபலங்கள் உயிரிழந்து வரும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபாகரன் மறைவு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பலரும் இடங்கள் தெரிவித்து வருகின்றனர்.