
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ள நிலையில் அர்ச்சனா கல் பாத்தி தயாரித்துள்ளார். அதன் பிறகு விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் கோட் படத்தில் சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் தி கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி படக்குழு தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தி கோட் படத்திற்கு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரு தினங்களில் சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டிருந்த நிலையில் நாளை ஒருநாள் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நாளை காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் நிலையில், மொத்தமாக 5 காட்சிகள் வெளியாகும். அதோடு நள்ளிரவு 2 மணிக்குள் கடைசி காட்சியை திரையிட்டு முடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்ததால் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தமிழக அரசுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.