அக்டோபர் மாத தொடக்கம் விடுதலை தங்கம் விலை ஏற்றத்தை கண்டு வரும் நிலையில் இன்னும் 3 வருடங்களில் சவரனுக்கு ஒரு லட்ச ரூபாய் வரையில் விற்பனையாகும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். தங்கம் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவர 59,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று ஒரு கிராம் 15 ரூபாய் வரையில் உயர்ந்து 7455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 7945 ரூபாய் ஆகவும் ஒரு சவரன் 63 ஆயிரத்து 560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விளையும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 109 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.