
தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகள் வெடிப்பார்கள். பட்டாசுகளை வெடிக்கும் போது மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் வெடிப்பது கட்டாயம். ஆனால் சில சமயங்களில் பட்டாசுகள் வெடிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்ததில் 82 பேர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக சென்னையில் பட்டாசு வெடித்த போது 7 பேர் காயமடைந்த நிலையில், 4 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி விட்டனர். சென்னையில் உள்ள ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் 3 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனால் மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 82 பேர் பட்டாசு வெடி விபத்தால் காயம் அடைந்துள்ளனர். மேலும் 4 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.