தமிழகத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட நிலையில் டிசம்பர் வரை மழை நீடிக்கும். அவ்வப்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் பருவநிலை தொடங்குவதில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் கன மழை பெய்தது.

சமீபத்தில் மதுரையில் கனமழை பெய்த நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் இன்று மற்றும் நாளை மிக கனழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பர் இரண்டாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் இயல்பை விட 123 சதவீதம் வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.