தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான 2,589 தபால் வாக்குகளின் மறு எண்ணிக்கை தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனிடையே, வாக்கு எண்ணும் மையம் அருகே போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கு எண்ணும் மையம் அருகே அமைந்துள்ள நீதிமன்றத்துக்கு வருகை தந்த வழக்கறிஞர்களை சோதனை செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.