
இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை மாற்றி அதிக கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.