
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் குகையில் கடந்த 22ஆம் தேதி சுரங்க விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 8 நாட்களாக மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வந்த நிலையில் தற்போது 8 தொழிலாளர்களும் உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
அதாவது அதிநவீன சிறிய ட்ரான் மூலம் விபத்து நடந்த சுரங்கத்திற்குள் கேமரா மூலம் பார்த்தனர். அப்போது 5 தொழிலாளர்கள் சகதியில் சிக்கி உயிரிழந்ததும் 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததும் தெரிய வந்தது. மேலும் கிட்டத்தட்ட மீட்பு பணிகள் என்பது 8 நாட்களாக நடந்து வந்த நிலையில் தற்போது தொழிலாளர்கள் அனைவரும் உயிரிழந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது