தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நேற்றைய உஸ்மானிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் மதில் சுவர் ஏறி குதித்து கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியதோடு பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

அதாவது புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியின் போது நடிகர் அல்லு அர்ஜுனை காண சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிலையில் அவருடைய ஜாமின் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெலுங்கானா காவல்துறை மனுதாக்கல் செய்துள்ளது.

அதாவது ரசிகை உயிரிழந்தது தெரிந்த பிறகும் அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேற மறுத்தார் என்ற போலீசார் குற்றசாட்டு தெரிவித்துள்ள நிலையில் அதை தொடர்பான சிசிடிவி வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட நிலையில் அவர்கள் அனைவருக்கும் தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.