தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பட குழு ஈடுபட்டுள்ளது. இந்த திரைப்படம் 38 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில் ஸ்டூடியோகிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே நவம்பர் 12ஆம் தேதிக்குள் ஸ்டூடியோகிரீன் நிறுவனம் 20 கோடி ரூபாயை உச்சநீதிமன்ற சொத்து ஆட்சியரிடம் செலுத்தவில்லை என்றால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்று நேற்று உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது.

இதனால் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கங்குவா திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 14ஆம் தேதி படம் வெளியாகும் நிலையில் ஒரு நாள் மட்டும் கூடுதல் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை கூடுதலாக 5 காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.