சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றவாளி ஞானசேகரன் திமுக கட்சியை சேர்ந்தவர் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று  பாஜக மகளிர் அணி சார்பில் நீதி பேரணி நடத்தப்பட்டது.

இந்தப் பேரணியை பாஜக மகளிர் அணி சார்பில் குஷ்பு தொடங்கி வைத்த நிலையில் தடையை மீறி பேரணி நடத்த முயன்றதாக  குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்தனர். இந்நிலையில் அவர்களை ஒரு ஆட்டு மந்தையில் அடைத்து வைத்ததாக தற்போது சர்ச்சை வெடித்துள்ளது. கிட்டத்தட்ட  6 1/2 மணி நேரத்திற்கு பிறகு குஷ்பூ உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் விடுதலை செய்த நிலையில் பின்னர் குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, ஆட்டுக்குட்டிகள் இருந்த இடத்தில் தான் பாஜகவினரை அடைத்து வைத்தனர் என்று கூறினார். மேலும் பாஜகவினரை அடைத்து வைத்த திருமண மண்டபத்தில் ஆட்டுக்குட்டிகளையும் அடைத்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டம் நடத்திய காரணத்திற்காக தற்போது நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் மீது போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மதுரை மேற்கு கிராம உதவியாளர் அளித்த புகாரின் பேரில் குஷ்பூ உள்ளிட்ட 319 பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.