
இன்று தீபாவளி பண்டிகை நாடும் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. தீப ஒளி திருநாளான இன்று வீடுகளில் விளக்கேற்றியும் இனிப்பு பலகாரங்கள் செய்தும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
இந்நிலையில் தற்போது சிவகாசி பட்டாசுகள் நாடு முழுவதும் 6000 கோடிக்கு விற்பனையானதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த வருடம் மழை காரணமாக 25% பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதாக தமிழ்நாடு வணிகர்கள் கூட்டமைப்பின் இணைச்செயலாளர் ரவிதுரை தெரிவித்துள்ளார்.