
ரயில்வே முன்பதிவு இணையதளமான IRCTC சேவை நாடு முழுவதும் முடங்கியிருக்கிறது. வழக்கமாக அடுத்த நாளுக்கான ஏசி வகுப்புகளுக்கு தத்கல் முன்பதிவு 10 மணிக்கு தொடங்கும். ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு 11 மணிக்கு தொடங்கும். ஒரு நிமிடம் தாமதித்தால் கூட டிக்கெட் விற்று தீர்ந்துவிடும். இந்த நேரத்தில் இணையம் முடங்கியுள்ளதால் ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.