இந்தியாவில் தற்போது 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கேரள மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கான் பீகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் பிறகு கேரளா ஆளுநராக பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ஒடிசா மாநிலத்தின் ஆளுநராக மிசோரம் ஆளுநராக இருந்த ஹரிபாபு கம்பம்படி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுவரை மாநிலத்தின் ஆளுநராக வி.கே சிங், மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.