ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 27 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு பின், இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான அட்டாரி- வாகா எல்லை மூடப்பட்டது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை ஜம்மு காஷ்மீர் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.