
ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டிப்போட்டி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மும்பை அணி ஏலத்தில் முதல்முறையாக நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்டை எடுத்துள்ளது.
இவரை 12.5 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் மும்பை அணி ஏற்கனவே ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், பும்ரா உட்பட 5 வீரர்களை தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.