
இன்று நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்விகளை முன் வைத்ததனர். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்துள்ளது.
அதாவது நீட் தேர்வை ரத்து செய்வதற்கான எந்தவிதமான பரிந்துரையும் அரசிடம் இல்லை என்று கூறிய மத்திய அரசு அதை ரத்து செய்ய முடியாது என்ற திட்டவட்டமாக கூறிவிட்டது. மேலும் கல்வி சுரண்டல், கல்வியை லாபகரமாக பார்க்கும் முறை மற்றும் வணிகமயமாக்கல் போன்றவைகளை தடுப்பதற்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாகவும் எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கியுள்ளது.