
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு தொடர்ந்தவர்கள் வினாத்தாள் கசிவின் காரணமாக தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நீட் தேர்வினை ரத்து செய்ய முடியாது என்று அறிவித்ததோடு நீட் தேர்வு முறை கேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் பதில் சொன்ன தேசிய தேர்வு முகமை மிகச் சிறிய அளவில்தான் வினாத்தாள் கசிவு என்பது நடந்துள்ளதாக கூறியது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பாட்னா மற்றும் ஹசாரியாக் ஆகிய பகுதிகளில் உள்ள மையங்களில் மட்டும் தான் நடந்துள்ளது. இதனால் மொத்த தேர்வையும் ரத்து செய்வது சரி கிடையாது. எனவே தேர்வு முறையில் உள்ள முறைகேடுகளை நிபுணர் குழு அமைத்து சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.