டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் மறுத்தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து தேசிய தேர்வு முகமையிடம் பல சரமாரி கேள்விகளை முன் வைத்தனர். அதாவது மாணவர்களிடம் நீட் தேர்வுக்கு ரூ.400 கோடி வசூலித்து விட்டு வினா தாள்களை ரிக்ஷாவில் தான் அனுப்புவீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த நீட் இளநிலை தேர்வு முடிவுகளை ‌ நகரங்கள் வாரியாகவும் மையங்கள் வாரியாகவும் வெளியிட வேண்டும் என தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 5 மணிக்குள் அனைத்து விவரங்களையும் சமர்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்ட நிலையில் தேசிய தேர்வு முகமை கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்ற நீதிபதிகள் ஜூலை 20-ம் தேதி பிற்பகலில் கண்டிப்பாக இளநிலை நீட் தேர்வு முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.