
நேபாள நாட்டில் உள்ள காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19 பேருடன் சென்ற சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தற்போது 5 பேர் பலியானதாக அறிவித்திருந்தனர்.
மேலும் இந்த விபத்தில் முழுவதுமாக எரிந்து சேதம் ஆனதால் தற்போது 18 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த விபத்தில் விமானி மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.