
இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் முன்னாள் தலைவர் மாதபி புரி புச். கடந்த 1994 ஆம் ஆண்டு நடந்த பங்கு பட்டியல் மோசடி தொடர்பாக மாதபி மற்றும் அதன் தற்போதைய முழுநேர இயக்குனர்கள் 3 பேர், பிஎஸ்இ அதிகாரிகள் இரண்டு பேர் ஆகியோரின் மீது வழக்கு பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதாவது பங்குச்சந்தை விதிகளை மீறி செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளில் தவறு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மாதபி உட்பட ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரங்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.